
இந்தியாவில் வெளியானது 'சாம்சங் கேலக்ஸி டேப் A9' சீரிஸ் டேப்லட்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தங்களுடைய பட்ஜெட் விலையிலான A சீரிஸின் கீழ் புதிய டேப்லட்களை வெளியிட்டிருக்கிறது சாம்சங். கேலக்ஸி டேப் A9 மற்றும் கேலக்ஸி டேப் A9+ ஆகிய இரு டேப்லட்களே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
60Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்ட 8.7 இன்ச் WQXGA LCD டிஸ்பிளேவை டேப் A9-ல் கொடுத்திருக்கிறது சாம்சங். பின்பக்கம் 8MP கேமராவும், முன்பக்கம் 2MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
15W சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,100mAh பேட்டரி, 4GB ரேம், 64GB ஸ்டோரேஜ், டூயல் ஸ்பீக்கர்கள், கணெக்டிவிட்டிக்காக ப்ளூடூத் 5.3, வை-பை 5 மற்றும் 4G ஆகிய வசதிகள் சாம்சங் கேலக்ஸி டேப் A9-ல் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சாம்சங்
சாம்சங் கேலக்ஸி டேப் A9 சீரிஸ்:
90Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்ட 11 இன்ச் WQXGA LCD டிஸ்பிளேவைப் பெற்றிருக்கிறது டேப் A9+. அத்துடன் பின்பக்கம் 8MP ரியர் கேமராவும், முன்பக்கம் 5MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 7,040mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், A9+ல் 4GB/8GB என இரண்டு ரேம் தேர்வுகளும், 64GB/128GB என இரண்டு ஸ்டோரேஜ் தேர்வுகளும் இருக்கின்றன.
டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 5.1, வை-பை 5 மற்றும் 5G வசதி ஆகியவையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கேலக்ஸி டேப் A9-ல் ஹீலியோ G99 ப்ராசஸர் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி டேப் A9+ல் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸரை அளித்திருக்கிறது சாம்சங்.
டேப்லட்
சாம்சங் A9 மற்றும் A9+: விலை
இந்தியாவில் கேலக்ஸி டேப் A9-ன் வை-பை வசதி மட்டும் கொண்ட மாடலை ரூ.12,999 விலையிலும், வை-பை மற்றும் 4G வசதி கொண்ட மாடலை ரூ.15,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது சாம்சங்.
சாம்சங் கேலக்ஸி A9+ டேப்லட்டானது நான்கு விதமான வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது. அடிப்படையான 4GB/64GB வை-பை வேரியன்டில் தொடங்கி, 8GB/128GB வை-பை மற்றும் 5G வசதி கொண்ட டாப் வேரியன்ட் வரை நான்கு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்படவிருக்கிறது.
இவற்றில் தொடக்க வேரியன்டான வை-பை வசதி மட்டும் கொண்ட 4GB/64GB வேரியன்டானது ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. டாப் எண்டான வை-பை மற்றும் 5G வசதி கொண்ட 8GB/128GB வேரியன்டானது ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.