
வெளியானது 'சாம்சங் கேலக்ஸி S23 FE 5G' ஸ்மார்ட்போன்
செய்தி முன்னோட்டம்
சாம்சங், தங்களுடைய ப்ளாக்ஷிப் S23 சீரிஸின் கீழ் புதிய FE மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது. கடந்தாண்டு வெளியான S22 ஸ்மார்ட்போன் சீரிஸின் FE மாடலை அந்நிறுவனம் தவிர்த்துவிட்ட நிலையில், S21 FE மாடலுக்கு பின்பு புதிய FE மாடலாக வெளியாகியிருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23 FE'.
60-120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.4 இன்ச் AMOLED திரையைப் பெற்றிருக்கிறது S23 FE. ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் UI 5.1 இயங்குதளத்தைப் பெற்றிருக்கும் S23 FE-யில் வேப்பர் கூலிங் சேம்பர் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பின்பக்கம் 50MP+12MP+8MP ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கும் S23 FE மாடலுக்கு ஐந்து வருட ஆண்ட்ராய்டு அப்டேட்டையும், நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்டையும் உறுதி செய்திருக்கிறது சாம்சங்.
சாம்சங்
சாம்சங் கேலக்ஸி S23 FE 5G: ப்ராசஸர் மற்றும் விலை
முன்பக்கம் 10MP செல்ஃபி கேமரா, பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ரேட்டிங்கையும் பெற்றிருக்கிறது புதிய ஸ்மார்ட்போன்.
புதிய S23 FE-யில் தங்களுடைய சொந்தத் தயாரிப்பான எக்ஸினோஸ் 2200 ப்ராசஸரையே பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யவிருக்கும் S23 FE மாடல்களில் மட்டும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,500mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய S23 FE மாடலின் 8GB+256GB வேரியன்டை ரூ.59,999 விலையில் வெளியிட்டிருக்கிறது சாம்சங். அக்டோபர் 5 முதல் அமேஸான் தளத்தின் மூலம் விற்பனை தொடங்குகிறது.