NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த ரஷ்யாவின் லூனா-25
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த ரஷ்யாவின் லூனா-25
    நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த ரஷ்யாவின் லூனா-25

    நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த ரஷ்யாவின் லூனா-25

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 17, 2023
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-3யின் கடைசி சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து, நிலவை 153 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது சந்திரயான்-3.

    இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலமும் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்திருக்கிறது.

    விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து ஐந்து நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்திருக்கிறது லூனா-25. 1976 ஏவப்பட்ட லூனா-24க்குப் பிறகு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த நிலவுத் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது ரஷ்யா.

    கடந்த ஆகஸ்ட் 15-ல் விண்வெளியில் இருந்தபடியே பல்வேறு புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறது லூனா-25 விண்கலம்.

    ரஷ்யா

    ரஷ்யாவின் திட்டம் என்ன? 

    அடுத்த ஐந்து நாட்கள் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரவிருக்கும் லூனா-25, ஆகஸ்ட் 21-ம் தேதி நிலவின் தென்துருவப்பகுதியில் தரையிறங்கவிருக்கிறது.

    சந்திரயான்-3 தரையிறங்கும் பகுதியிலிருந்து, சுமார் 100 முதல் 120 கிமீ தொலைவில் லூனா-25வை தரையிறக்கத் திட்டமிட்டிருக்கிறது ரஷ்யா. நிலவில் ஒரு வருடக்காலம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது லூனா-25.

    நிலவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்கள், நிலவின் வளிமண்டலத்தில் உள்ள பிளாஸ்மா மற்றும் துகள்கள் மற்றும் நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் உறைநிலையில் இருக்கும் தண்ணீர் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருக்கிறது லூனா-25.

    ஆகஸ்ட் 21-ல் தென்துருவப் பகுதியில் லூனா 25 வெற்றிகரமாகத் தரையிறங்கும் பட்சத்தில், நிலவின் தென்துருவத்தில் மென் தரையிறங்கும் முதல் நாடு என்ற பெயரை ரஷ்யா பெறும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    சந்திரன்
    விண்வெளி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரஷ்யா

    ஸ்புட்னிக் V தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி கழுத்தை நெரித்து கொலை உலகம்
    ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் உலகம்
    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம் உலகம்
    வீடியோ: அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதிய ரஷ்ய ஜெட் விமானம் உலகம்

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? விண்வெளி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    விண்வெளி

    செவ்வாய் கிரகத்தின் காலை மற்றும் மாலை வேளையின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறது நாசா நாசா
    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    விண்வெளி வீரர்களின் சிறுநீரை 98% மறுசுழற்சி செய்து புதிய சாதனை படைத்த நாசா நாசா
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் அறிவியல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025