இந்திய தயாரிப்பு ஹெட்போனை அணிந்திருக்கும் ரிஷி சுனக்கின் புகைப்படம் இணையத்தில் வைரல்
இந்தியாவில் நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்களும், பிரதமர்களும் இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்தியாவில் ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரிட்டிஷ் கவுன்சிலில் பள்ளி மாணவர்களிடம் உரையாடியிருக்கிறார். அப்போது அவர் இந்திய நிறுவனமான 'போட்' (Boat) தயாரித்த ஹெட்போனை அணிந்திருக்கிறார். மேலும், போட் நிறுவனத்தின் ஹெட்போன அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பகிர்ந்திருக்கிறார் ரிஷி சுனக். அந்தப் பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்திருக்கிறார் போட் நிறுவனத்தின் சிஇஓ அமன் குப்தா. ரிஷி சுனக் மற்றும் அமன் குப்தாவின் இந்தப் பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.