
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.50% என உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பாதிப்புகள் என்ன?
உலக பொருளாதாரம் சரிவும், பணவீக்கமும் தான் ரெப்போ வட்டி உயர்வுக்கு காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
ஒரு நாட்டின் மத்திய வங்கி அந்நாட்டில் இருக்கும் வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி விகிதம்தான் இந்த ரெப்போ வட்டி விகிதம்.
ரெப்போ வட்டியை உயர்த்தினால், பணவீக்கமும் கட்டுப்படும் என்பது தான் ஒரு கோட்பாடு.
சந்தையில் பணப்புழக்கம் மற்றும் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்த
ரெப்போ வட்டி விகிதம்
9 மாதங்களில் 6 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
இதுமட்டுமின்றி, ரிசர்வ் வங்கிக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும் என்பதால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடன் போன்றவற்றின் வட்டியை உயர்த்தி, கடன் வாங்கியவர்களும் கூடுதலான பணத்தை வட்டியாகக் கட்டவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதனால், வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், கல்விக் கடன்கள், தனிநபர் கடன்கள், அடமானங்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் ரெப்போ ரேட் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைவது உண்டு.
விலைவாசி உயர்வு
ஜூலை மாதம் 6.75% ஆக இருந்த உணவுப் பொருள் பணவீக்கம் ஆகஸ்டில் 7.62% ஆக உயர்ந்துள்ளது.
எதிர் வரும் காலங்களில் பணவீக்க விகிதத்தை விட உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.