
ஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா?
செய்தி முன்னோட்டம்
ஜியோ-பிபி நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாக இ20 பெட்ரோலை குறிப்பிட்ட பங்க்குகளில் தொடங்கியுள்ளது.
இதனால், இந்த பெட்ராலின் விலை மற்ற பெட்ரோலை விடக் குறைவாக இருக்கும். எதிர்காலத்தில் இந்த பெட்ரோல் லிட்டருக்கு ரூ60க்கும் விற்பனையாகும் என கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் தற்போது விற்பனையாகும் பெட்ரோல் அளவில் 20 சதவீதம் எத்தனாலை கலப்பது மூலம் இந்தியாவிற்கு ஆண்டிற்கு ரூ 54,894 கோடி பணம் மிச்சமாகிறது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை வெறும் 10 சதவீதம் குறைப்பது மூலம் நடக்கிறது. தொடர்ந்து எத்தனால் அளவை அதிகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
இந்நிலையில், இந்தியாவில் முதல் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனமாக ஜியோ-பிபி களமிறங்கியுள்ளது.
ஜியோ பிபி
குறைந்த விலை பெட்ரோலை அறிமுகம் செய்யும் ஜியோ நிறுவனம்
ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கூட்டு சேர்த்து ரிலையன் பிபி மொபிலிட்டி என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
மேலும், இ-20 வகை பெட்ரோலை பயன்படுத்துவது மூலம் மாசு வெகுவாக குறையும். எத்தனால் எரிவது மூலம் மாசு இல்லாமல் இருக்கும். இதனால் தான் அரசு இந்த எத்தனால் கலப்பை ஆதரிக்கிறது.
இதனால், அரசு எத்தனால் கலப்பை 2025ம் ஆண்டு இந்தியா முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் இந்த பெட்ரோல் மட்டுமே கிடைக்க வேண்டும் என் நிலையை உருவாக்க முடிவு செய்துள்ளது.
எனவே, ஜியோ இந்தியா முழுவதும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள குறிப்பிட்ட பங்க்களில் இதன் விற்பனையைத் துவங்கியுள்ளது.