ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கான்வா கூட்டணி: இலவச கான்வா புரோ சந்தா பெறுவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, உலகின் பிரபல வடிவமைப்பு தளமான கான்வா நிறுவனத்துடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான 'Canva Pro' அல்லது 'Canva Pro Lite' சந்தாவை இலவசமாக வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ.4,000 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய இந்தச் சலுகை, குறிப்பிட்ட பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் பயன்படுத்தும் தகுதியுள்ள ஜியோ பயனர்களுக்குக் கிடைக்கும். வடிவமைப்பில் முன்அனுபவம் இல்லாத சாதாரண பயனர்களும் எளிதாகப் தொழில்முறை டிசைன்களை உருவாக்க இக்கூட்டணி உதவும்.
வழிமுறைகள்
சலுகையை பெறும் எளிய வழிமுறைகள்
இலவச கான்வா சந்தாவை பெற வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமோ அல்லது மறைமுக கட்டணங்களையோ செலுத்தத் தேவையில்லை.
பயனர்கள் தங்களது MyJio செயலியில் உள்நுழைந்து, சலுகைப் பகுதியில் கான்வா ஆஃபரை தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.
நாளொன்றுக்கு 2GB டேட்டா வழங்கும் ரூ.349 மற்றும் அதற்கு மேற்பட்ட பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு இச்சலுகை பொருந்தும்.
கான்வா புரோ சந்தா மூலம் ஆயிரக்கணக்கான பிரீமியம் டெம்ப்ளேட்டுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபான்ட்களை அணுக முடியும்.
மேலும், ஒரே கிளிக்கில் பேக்கிரவுண்ட் நீக்கும் அம்சம், மேஜிக் இரேஸர் மற்றும் ஏஐ தொழில்நுட்ப அடிப்படையிலான உரையாடல் வழி டிசைன் வசதிகளும் இதில் அடங்கும்.
கான்வா புரோ லைட் சந்தாவில் இந்த அம்சங்களில் சில குறிப்பிட்ட எல்லைகளுடன் வழங்கப்படும்.
மொழி
இந்திய மொழிகளுக்கான ஆதரவு
இந்த இணைப்பின் மூலம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் உள்ளடக்கங்களை (Content) உருவாக்க முடியும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தொழில்முறை தரத்திலான டிசைனிங் கருவிகளைத் தங்களின் சொந்த மொழியிலேயே எளிதாகப் பயன்படுத்த இது வழிவகுக்கும்.