இந்தியாவில் வெளியானது ரியல்மி 11 5G மற்றும் ரியல்மி 11X 5G
இந்தியாவில் பட்ஜெட் செக்மெண்டில் இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது ரியல்மி. ரியல்மி 11 5G மற்றும் ரியல்மி 11X 5G ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையே தற்போது வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். ரியல்மி 11 சீரிஸின் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களாக இவற்றை அறிமுகம் செய்திருக்கிறது அந்நிறுவனம். கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆனால், கேமராவில் மற்றும் இரு மொபைல்களுக்கும் இடையே வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறது ரியல்மி. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.72 இன்ச் AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6100 ப்ராசஸர் மற்றும் 5000mAh பேட்டரி ஆகிய வசதிகளை அளித்திருக்கிறது ரியல்மி.
ரியல்மி 11 மற்றும் ரியல்மி 11X: வேறுபாடுகள் மற்றும் விலை
ரியல்மி 11ல் 108MP+2MP பின்பக்க கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ரியல்மி 11Xல் 64MP+2MP பின்பக்க கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமராவைக் கொடுத்திருக்கிறது ரியல்மி. மேலும், ரியல்மி 11ல் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ரியல்மி 11Xல் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை மட்டுமே கொடுத்திருக்கிறது ரியல்மி. இந்தியாவில் ரியல்மி 11ன் 8GB+128GB வேரியன்டை ரூ.18,999 விலையிலும், 8GB+256GB வேரியன்டை ரூ.19,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதேபோல், ரியல்மி 11Xன் 6GB+128GB வேரியன்டை ரூ.14,999 விலையிலும், 8GB+128GB வேரியன்டை ரூ.15,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது ரியல்மி. ரியல்மி 11ஐ ஆகஸ்ட் 29 முதல் விற்பனை செய்யப்படவிருக்கும் நிலையில், ரியல்மி 11Xன் விற்பனையானது ஆகஸ்ட் 30ல் தொடங்கவிருக்கிறது.