வெளியானது ரியல்மீ-ன் புதிய நார்சோ பட்ஜெட் மொபைல்!
இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் செக்மெண்ட் கிங் என்றால் அது ரியல்மீ தான். பட்ஜெட் செக்மெண்ட் வாடிக்கையாளர்களுக்கு 10,000 ரூபாய்க்குள் பல்வேறு விதமாக ஆப்ஷன்களை வழங்குகறது ரியல்மீ. இன்று (ஏப்ரல் 12) புதிதாக நார்சோ N55 என்ற மொபைலை பட்ஜெட் செக்மெண்டில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. 10,999 ரூபாய் விலையில் பட்ஜெட் செக்மெண்ட் கேமர்களை மனதில் வைத்து இந்த புதிய ஆண்ட்ராய மொபைல வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. இந்த புதிய மொபைலுக்கான விற்பனை ஏப்ரல் 18-ம் தேதி துவங்குகிறது. SBI, HDFC மற்றும் ICICI பேங்க் வாடிக்கையாளர்கள் கார்டைப் பயன்படுத்தி அடிப்படை மாடலை ரூ.500 தள்ளுபடியுடனும், டாப் எண்டு மாடலை ரூ.1000 தள்ளுபடியுடனும் வாங்கிக் கொள்ள முடியும்.
என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது 'நார்சோ N55'?
6.72 எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ G88 சிப்செட், ஆண்ட்ராய்டு 13, 64 MP + 2 MP பின்பக்க கேமரா, 8 MP செல்ஃபி கேமரா, 90hz ரெப்ரஷ் ரேட், 5000 mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ச் சார்ஜிங் வசதியுடன் வெளியாகியிருக்கிறது புதிய N55. 4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல் 10,999 ரூபாய்க்கும், 6 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்டு மாடலை 12,999 ரூபாய்க்கும் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. நாளை (ஏப்ரல் 13) மதியம் 12 மணிக்கு சிறப்பு விற்பனையாக ரூ.1,000 தள்ளுபடியுடன் அமேசான் மற்றும் ரியல்மீ தளத்தில் இந்த போனை விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது ரியல்மீ.