இந்தியாவில் வெளியானது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான 'ரியல்மி C67 5G'
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் புதிய 'C67 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ரியல்மி நிறுவனம். ரியல்மி C சீரிஸில் 5G வசதியுடன் வெளியாகியிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது தான். என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது ரியல்மி C67 5G?
120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் LCD திரையைக் கொண்டிருக்கிறது ரியல்மி C67. 680 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தை உமிழும் திறனுடன், 180Hz டச் சேம்ப்ளிங்கையும் கொண்டிருக்கிறது இந்தத் திரை.
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்ட்ன்ட்ஸூக்கான IP54 ரேட்டிங்கைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில், பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பின்பக்கம் 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சாரும், முன்பக்கம் 8MP செல்ஃபி கேமராவும் இந்த C67 ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரியல்மி
ரியல்மி C67 5G: ப்ராசஸர் மற்றும் விலை
இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட்டைப் பயன்படுத்தியிருக்கிறது ரியல்மி. மேலும், ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI 4.0-வைப் பெற்றிருக்கிறது இந்தப் புதிய ஸ்மார்ட்போன். இத்துடன் இரண்டு வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும் உறுதியளித்திருக்கிறது ரியல்மி.
இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கணெக்டிவிட்டிக்காக 5G, வை-பை, ப்ளூடூத் 5.2 மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படையான 4GB/128GB வேரியன்டானது ரூ.13,999 விலையிலும், 6GB/128GB வேரியன்டானது ரூ.14,999 விலையிலும் வெளியாகியிருக்கிறது. டிசம்பர் 20ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைத்தளத்தின் மூலம் இதன் விற்பனை தொடங்குகிறது.