
இந்தியாவில் வெளியானது ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
செய்தி முன்னோட்டம்
தங்களுடை புதிய 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. இந்த சீரிஸின் கீழ் ரியல்மீ 11 ப்ரோ மற்றும் ரியல்மீ 11 ப்ரோ+ ஆகிய மாடல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
ரூ.30,000-க்குள்ளான விலைகளில் மேற்கூறிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 950 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் கொண்ட, 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளேவை வழங்கியிருக்கிறது ரியல்மீ.
11 ப்ரோ+-ல் பின்பக்கம் 200MP முதன்மைக் கேமரா, 8MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சாரும், முன்பக்கம் 32MP செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டிருக்கின்றது.
11 ப்ரோவில் பின்பக்கம் 100MP முதன்மைக் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சாரும், முன்பக்கம் 16MP செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டிருக்கின்றது.
ரியல்மீ
ப்ராசஸர் மற்றும் விலை:
இரண்டு மாடல்களிலும் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களாக டூயல் சிம், 5G, வைபை 6, ப்ளூடூத் 5.2 மற்றும் டைப்-சி போர்ட் ஆகிய வசதிகளை வழங்கியிருக்கிறது ரியல்மீ.
ரியல்மீ 11 ப்ரோ மாடலின் 8GB/128GB வேரியன்டிற்கு ரூ.23,999 விலையும், 8GB/256GB வேரியன்டிற்கு ரூ.24,999 விலையும், 12GB/256GB வேரியன்டிற்கு ரூ.27,999 விலையும் நிர்ணயம் செய்திருக்கிறது ரியல்மீ.
அதேபோல், 11 ப்ரோ+ மாடலின் 8GB/256GB வேரியன்டிற்கு ரூ.27,999 விலையும், 12GB/256GB வேரியன்டிற்கு ரூ.29,999 விலையும் நிர்ணயம் செய்திருக்கிறது அந்நிறுவனம்.
ப்ரோ+ மாடலானது ஜூன் 15 முதலும், ப்ரோ மாடலானது ஜூன் 16 முதலும் விற்பனை செய்யப்படவிருக்கிறது.