
எப்படி இருக்கிறது ரியல்மீயின் புதிய 11 ப்ரோ+ 5G ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய முந்தைய ஸ்மார்ட்போனான ரியல்மீ 10 ப்ரோ+ 5G-ன் அப்டேட்டட் வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது ரியல்மீ 11 ப்ரோ+ 5G. புதிய போனில் பல்வேறு புதிய அப்டேட்களை அள்ளித் தெளித்திருக்கிறது ரியல்மீ. புதிய 11 ப்ரோ+ 5G மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
வசதிகள்:
6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸர்
200MP+8MP+2MP ரியர் கேமரா: 32MP செல்ஃபி கேமரா
5000 mAh பேட்டரி
100W சார்ஜிங் வசதி
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
5G வசதி
ஆண்ட்ராய்டு 13
விலை:
8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.27,999
12 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.29,999
மொபைல் ரிவ்யூ
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
முந்தைய 10 ப்ரோ+ 5G விட அனைத்து வகையிலும் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனாக இந்த 11 ப்ரோ+ 5G-ஐ உருவாக்கியிருக்கிறது ரியல்மீ.
ஆனால், இதனுடைய போட்டியாளர்களான மோட்டோ எட்ஜ் 40, ஐகூ நியோ 7 மற்றும் போகோ F5 5G ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ப்ராசஸரின் பெர்ஃபாமன்ஸ் சற்றே குறைவாக இருக்கிறது.
மேலும், இதன் பயன்பாட்டு அனுபவம் சிறப்பாக இருந்தாலும், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பிளாட்வேர்களும், ஆங்காங்கே முளைக்கும் விளம்பரங்களும், இதன் பயன்பாட்டு அனுபவத்தை மங்கச் செய்கிறது.
பகல் நேரத்தில் இதன் 200MP கேமரா சிறப்பாக இருந்தாலும், இரவு நேரத்தில் சிறப்பான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கிறது எனக் கூற முடியாது.
இது ஒரு சிறப்பான ஸ்மார்ட்போன் தான், எனினும் போட்டியாளர்கள் இன்னும் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.