புதிய மிட்ரேஞ்சு சிப்செட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் குவால்காம் மற்றும் மீடியாடெக்
செய்தி முன்னோட்டம்
குவால்காம் மற்றும் மீடியாடெக் ஆகிய ஸ்மார்ட்போன் ப்ராசஸர் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய புதிய ப்ராசஸர்களை அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த மாதம் தான் தங்களுடைய ஃப்ளாக்ஷிப் சிப்பான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்பை குவால்காமும், டைமன்சிட்டி 9300 சிப்செட்டை மீடியாடெக்கும் வெளியிட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து தங்களது புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களுக்கான புதிய சிப்செட்களை வெளியிடத் தயாராகி வருகின்றன அந்நிறுவனங்கள்.
புதிய 'ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3' மிட்ரேஞ்சு சிப்பை குவால்காமும், 'டைமன்சிட்டி 8300' சிப்பை மீடியாடெக்கும் அடுத்த சில வாரங்களில் வெளியிடவிருக்கின்றன.
ஸ்மார்ட்போன்
குவால்காம் மற்றும் மீடியாடெக்கின் புதிய மிட்ரேஞ்சு சிப்செட்கள்:
குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்பானது, வரும் நவம்பர் 23ம் தேதி சீனாவில் வெளியாகவிருக்கும் ஹானர் 100 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேபோல், மீடியாடெக்கின் டைமன்சிட்டி 8300 சிப்பானது, இந்த மாத இறுதிக்குள் வெளியாகவிருக்கும் ரெட்மீ K70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மூலம் முதன் முறையாக அறிமுகப்படுத்கப்படவிருக்கிறது.
புதிய ஸ்னாப்டிராகன் சிப்பில் அட்ரினோ 720 GPU-வையும், டைமன்சிட்டி சிப்பில் G520 MC6 GPU-வையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த சிப்செட்கள் குறித்த மேலதிக தகவல்களை குவால்காமும், மீடியாடெக்கும் விரைவில் வெளியிடும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்பானது விவோ S18, விவோ V30 மற்றும் ஒன்பிளஸ் நார்டு 4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.