பிஎப் திட்டத்தை விட அதிக வருமானம் தரும் பவர் பைனான்ஸ் Dividend பங்கு!
பிஎப் சிறு சேமிப்பு திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுத்திருக்கிறது Dividend பங்கு நிறுவனம். பங்கு சந்தை மூதலீட்டாளர்கள் மத்தியில் Dividend பங்குகள் மீதான ஆர்வம் சமீபத்தில் அதிகரித்துள்ளது. கூடுதல் வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு டிவிடெண்ட் பங்குகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. தற்போது பவர் பைனான்ஸ் பங்கு விலை 156.55 ரூபாயாக உள்ளது. அதுவே கடந்த ஒரு ஆண்டில் 10 ரூபாய் Dividend வழங்கி உள்ளது. கடந்த 2022 ஜூன் மாதம் 1.25 ரூபாய் ஆகவும், 2022 செப்டம்பர் மாதம் 2.25 ரூபாய் ஆகவும், 2022 நவம்பர் மாதம் 3 ரூபாய் ஆகவும், 2023 பிப்ரவரி மாதம் 3.50 ரூபாய் என மொத்தம் 10 ரூபாய் டிவிடெண்ட் செலுத்தியுள்ளது.
சிறு சேமிப்பில் அதிக லாபத்தை தரும் Dividend பங்குகள் - வருமானம் எவ்வளவு?
ஒரே ஆண்டு காலத்தில் 30% பங்கு விலையும் உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பவர் பைனான்ஸ் பங்கு விலை சுமார் 120 ரூபாயாக இருந்தது. இப்போது பங்கு விலை 156.55 ரூபாயாக உயர்ந்துள்ளது. அப்படி பார்த்தால், 8.3% வருமானம் ஆண்டுக்கு கிடைத்துள்ளது. மொத்தமாக சுமார் 38% வருமானத்தை டிவிடெண்ட் பவர் பைனான்ஸ் பங்கு கொடுத்துள்ளது. மற்ற திட்டங்களான பிஎப் 7.1%, செல்வமகள் சேமிப்பு திட்டம் 7.6%, சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் 8% கொடுக்கிறது. எனவே மூதலீட்டாளர்கள் இதில் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றனர்.