Page Loader
8.2% வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்னென்ன?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் பயன்கள்

8.2% வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்னென்ன?

எழுதியவர் Siranjeevi
Apr 04, 2023
06:04 pm

செய்தி முன்னோட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமும் பல நன்மைகளும், அதிக வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. SCSS ஆனது, இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக கருதப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதிய ஆண்டுகளில் அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயனுள்ளதாக அமைகிறது. கணக்கை திறப்பது எப்படி? மூத்த குடிமக்கள் திட்டத்தின் கணக்கை திறக்க வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் திறக்கலாம். இதற்கு குறைந்த பட்ச வைப்பு தொகையாக 1000 ரூபாயும் அதிகபட்ச தொகையாக 30 லட்சம் வரை தேர்வு செய்யலாம்.

சேமிப்பு திட்டங்கள்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை சரிபார்க்கவும்

யார் தொடங்கலாம்? 55 வயதுடையவர்களில் இருந்து 60 வயது உள்ளவர்கள் சிறப்பு ஓய்வூதியம், VRS பெற்றவர்களும் கணக்கை தொடங்கலாம். மனைவியுடனும் அல்லது தனியாகவும் கணக்கை திறக்கலாம். வட்டி விகிதம் என்ன? மூத்த குடிமக்களுக்கு வட்டியானது டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கப்படும். வட்டி விகிதம் 8.2% ஆகும். நன்மைகள் இந்த திட்டம் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். எனவே இது நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் வட்டி வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களின் முதல் நாளில் உங்கள் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும்.