இந்தியாவில் புதிய விலை குறைவான 'C65' ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது போகோ
இந்தியாவில் மற்றுமொரு விலை குறைந்த ஸ்மார்ட்போனாக, தங்களுடைய புதிய 'C65' மாடலை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான போகோ. பேஸ்டல் ப்ளூ மற்றும் மேட் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் வெளியாகியிருக்கும் புதிய போகோ C65 மாடலில், 90Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சேம்ப்ளிங் கொண்ட 6.74 இன்ச் டிஸ்பிளேவை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம். பின்பக்கம் 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP மேக்ரோ லென்ஸூடன் கூடிய ட்ரிபிள் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், முன்பக்கம் 8MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.
போகோ C65: ப்ராசஸர் மற்றும் விலை
இந்தப் புதிய விலை குறைவான ஸ்மார்ட்போனில், மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது போகோ. மேலும், 18W ஃபாஸ்ட்-சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியும் இந்த விலை குறைவான போகோ C65 மாடலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொபைலுடன், பாக்ஸில் 10W சார்ஜர் ஒன்றையும் கொடுத்திருக்கிறது போகோ. இந்தியாவில் போகோ C65-யின் 4GB+128GB வேரியன்ட் ரூ.8,499 விலையிலும், 6GB+128GB வேரியன்ட் ரூ.9,499 விலையிலும், 8GB+256GB வேரியன்ட் ரூ.10,999 விலையிலும் வெளியாகியிருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி நண்பரல் 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனுக்கான விற்பனை தொடங்குகிறது.