
இந்தியாவில் வெளியானது போகோவின் புதிய POCO F5 ஸ்மார்ட்போன்!
செய்தி முன்னோட்டம்
F5 மற்றும் F5 ப்ரோ ஆகிய இரு மாடல் ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது போகோ நிறுவனம்.
ஆனால், இந்தியாவில் தற்போதைக்கு F5 மாடலை மட்டுமே அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் X5 ஸ்மார்ட்போனுக்குப் பிறகு, இந்தியாவில் போகோவின் இரண்டாவது அறிமுகம் இது. சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மீ நோட் 10 டர்போ மாடலுடன் ஒத்துப் போகிறது இந்த போகோ F5.
ரூ.30,000-க்குள்ளான விலையில் மிட்ரேஞ்ச் செக்மண்டில் புதிய போனை அறிமுகம் செய்திருக்கிறது போகோ.
6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே, 120Hz ரெப்ரஷ் ரேட், 1000 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை பக்கவாட்டில் கொடுத்திருக்கிறது போகோ.
மார்ச் 16 முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
போகோ
ப்ராசஸர், வசதிகள் மற்றும் விலை:
இந்த போகோ F5-யில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது போகோ. 8GB/256GB மற்றும் 12GB/256GB என இரண்டு ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் போகோ F5-வானது, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கிறது.
பின்பக்கம் 64MP முதன்மைக் கேமரா, 8MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.
டூயல் சிம், ப்ளூடூத் 5.3, 5G மற்றும் வைபை 6E ஆகிய கனெக்டிவிட்டி வசதிகளைக் கொண்டிருக்கிறது போகோ F5.
இதன் 8GB ரேம் வேரியன்ட் ரூ.29,999 விலையிலும், 12GB ரேம் வேரியன்ட் ரூ.33,999 விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.