இந்தியாவில் X பதிவுகளில் அதிக லைக்ஸ் பெற்றதில் பிரதமர் மோடி 'நம்பர் 1'
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளங்களில் மக்களின் ஆதரவை பெறுவதில் தனக்கு நிகர் எவருமில்லை என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். எக்ஸ் (X), (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட முதல் 10 பதிவுகளில், 8 இடங்களை மோடியின் பதிவுகளே பிடித்துள்ளன. எக்ஸ் தளம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஒரு மாதத்தில் இந்திய அளவில் வைரலான பதிவுகளில் பிரதமர் மோடியின் பக்கமே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்த போது அவருக்குப் 'பகவத் கீதை' புத்தகத்தைப் பரிசாக வழங்கிய பதிவு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பதிவை 6.7 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர், மேலும் 2.31 லட்சம் பேர் இதனை விரும்பியுள்ளனர் (Likes).
பதிவுகள்
மோடி பதிவிட்டு வரவேற்பை பெற்ற மற்ற பதிவுகள்
"எனது நண்பர் புதினை இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி" எனப் பிரதமர் மோடி பதிவிட்ட மற்றொரு பதிவு 10.6 மில்லியன் பயனர்களை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது. அரசியல் மட்டுமல்லாது ஆன்மிகம் மற்றும் விளையாட்டுத் துறையிலும் மோடி வெளியிட்ட பதிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற 'தர்ம த்வஜாரோஹன்' (கொடியேற்று விழா) தொடர்பான பதிவை 1.40 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த மோடியின் பதிவு 1.47 லட்சம் விருப்பங்களைப் பெற்றுள்ளது.