7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வானது டெல்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி மொபைல் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, "தொழில்நுட்பம் என்பது ஒவ்வொரு நாளும் மாற்றம் அடைவது. இங்கே இப்போது இருப்பது தான் எதிர்காலம். 5ஜி தொழில்நுட்பமானது இந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
6G தொழில்நுட்பத்தின் மேம்பாட்டினை இந்தியா முன்னின்று உலக நாடுகளை வழிநடத்தும்." எனத் தெரிவித்துள்ளார். இந்த மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களை உலகம் பயன்படுத்துகிறது:
மேலும் பிரதமர் மோடி பேசிய போது, "கூகுள், சாம்சங் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி நிறுனங்கள் தங்களுடைய மொபைல் போன்களை இந்தியாவில் தயாரிக்கின்றன.
இந்த நேரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை இந்த உலகம் பயன்படுத்துகிறது என நாம் பெருமையாகக் கூற முடியும்." எனக் கூறியுள்ளார்.
இந்த 7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை தொடங்கி வைத்து உரையாடியோது மட்டுமில்லாமல், இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்காக '5G தொழில்நுட்ப ஆய்வகங்களை' வழங்கினார் பிரதமர் மோடி.
6G தொழில்நுட்பத்தை நாம் மேம்படுத்த வேண்டும் என்பதற்காவே, இந்த 5G ஆய்வகங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.