LOADING...
செயழிப்பை சந்தித்த OpenAIஇன் ChatGPT செயலி
செயழிப்பை சந்தித்த OpenAIஇன் ChatGPT செயலி

செயழிப்பை சந்தித்த OpenAIஇன் ChatGPT செயலி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 09, 2023
05:32 pm

செய்தி முன்னோட்டம்

இன்று பல பயனர்களுக்கு ChatGPT செயலிழந்துள்ளது. AI chatbot வலைப்பக்கத்தில், "ஏதோ தவறாகிவிட்டது. இந்தச் சிக்கல் தொடர்ந்தால், help.openai.comஇல் உள்ள எங்கள் உதவி மையத்தின் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும்" என்ற தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் நீடித்த இந்த செயலிழப்பினால், 100 மில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த செயலிழப்பிற்கான அதிகாரபூர்வ விளக்கம் இன்னும் தரப்படவில்லை. ஓபன் AI-இன் சாட்ஜிபிடி ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வைரலான இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. உள்ளடக்கத் துண்டுகளை உருவாக்கவும், கவிதை எழுதவும், ஆராய்ச்சித் தகவல் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள் என AI சாட்போட்டை தங்கள் தினசரி வேலைகளுக்கு பலரும் பயன்படுத்துகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

செயழிப்பை சந்தித்த OpenAIஇன் ChatGPT செயலி