வாட்ஸ்அப்பிலேயே சாட்ஜிபிடியை தொடர்புகொள்ளும் வசதி; ஓபன் ஏஐயின் அசத்தல் அப்டேட்
1-800-242-8478 என்ற பிரத்யேக தொடர்பு எண் மூலம் உலகளவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் சாட்ஜிபிடியுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவும் புதிய அம்சத்தை ஓபன்ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட், பிரபலமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப்பின் மூலம் ஆக்கப்பூர்வமான உதவி, திட்ட ஆலோசனை, பரிந்துரைகள் அல்லது பொதுவான உரையாடலைப் பெற பயனர்களை அனுமதிக்கிறது. இந்த முயற்சியானது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக நம்பகமான அதிவேக தரவுகளுக்கு குறைந்த அணுகல் உள்ள பயனர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப், அதன் இரண்டு பில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களுடன், சாட்ஜிபிடியுடன் தொடர்பு கொல்வதற்கு ஒரு பழக்கமான மற்றும் வசதியான தளத்தை வழங்குகிறது.
12 டேஸ் ஆஃப் கிறிஸ்துமஸ் சீரீஸ்
ஓபன்ஏஐ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, அதன் "12 டேஸ் ஆஃப் கிறிஸ்மஸ்" சீரீஸின் ஒரு பகுதியாகும். இந்த சீரீஸில் ஏற்கனவே Sora எனும் டெக்ஸ்ட்-டு-வீடியோ பிளாட்ஃபார்ம் மற்றும் ஒரு புதிய பிரீமியம் சந்தாவை மாதம் ஒன்றுக்கு $200 என்ற தொகைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பிரீமியம் சந்தா அதன் அதிநவீன ஏஐ மாடல்களுக்கான அணுகலை வழங்குகிறது. இதற்கிடையே, சாட்ஜிபிடியின் வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு சோதனைக்குரியது என்பதால், மேம்படுத்தப்பட்ட அம்சங்களைத் தேடும் பயனர்கள் தங்கள் முதன்மை சாட்ஜிபிடி கணக்குகளைப் பயன்படுத்துமாறு ஓபன்ஏஐ வலியுறுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் அப்டேட்
இந்த ஒருங்கிணைப்பு, அதன் ஏஅஐ மாதிரிகளுடன் தொடர்புடைய வளர்ந்து வரும் கணக்கீட்டு செலவுகளை நிவர்த்தி செய்யும் போது அதன் பயனர் தளத்தை விரிவுபடுத்தவும், வருவாயை அதிகரிக்கவும் மற்றும் முதலீட்டாளர்களை திருப்திப்படுத்தவும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் அப்டேட்டிற்கு மத்தியில், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, ஒருவருக்கு ஒருவர் மற்றும் குழு அரட்டைகளுக்கான புதிய தட்டச்சு காட்டி உட்பட, மெசேஜிங் அனுபவத்தை மேம்படுத்த அப்டேட்களை வெளியிடுகிறது. மேலும், மே 2025 முதல் 15.1க்கு கீழ் உள்ள ஐஓஎஸ் பதிப்புகளுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்தும். அவர்கள் மே 2025 முதல் பயனர்கள் தங்கள் சாதனங்களை மேம்படுத்தினால் மட்டுமே வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்.