OpenAI ChatGPT Plus பிரீமியம் சந்தாவிற்கு மாதம் கட்டணம் அறிவிப்பு!
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட்டணியில் உருவாகியுள்ள ChatGPT ஆன்லைன் கருவி தற்போது பிரபலமாகியுள்ள நிலையில், இதற்கு போட்டியாக பல செயற்கை நுண்ணறிவு கருவிகள் வர ஆரம்பித்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் இறுதியில் உருவாக்கப்பட்ட தளம் ChatGPT இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, மொழியியல் நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கூகுளைப்போலவே நமக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் நொடிப்பொழுதில் பெற முடியும். இந்த ChatGPT ஆரம்பத்திலேயே கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு இது போட்டியாக வளர்ந்ததால் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய அச்சத்தில் உள்ளது.
OpenAI ChatGPT Plus மாத கட்டணம் அறிவிப்பு - எங்கு அமலில் உள்ளது?
இதனிடையே இலவசமாக செயல்பட்டு வந்த சாட்ஜிபிடி, தற்போது, OpenAI ChatGPT Plus வாடிக்கையாளர்களுக்கு மாதம் பிரீமியம் சந்தாவை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தற்போது ChatGPT Plus பயன்பாட்டில் உள்ளது. ChatGPT இன் பிரீமியம் விலை மாதத்திற்கு, $20 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ChatGPTக்கு இலவச அணுகலை தொடர்ந்து வழங்குவோம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. தொடர்ந்து, விரைவில் மற்ற நாடுகளுக்கும் OpenAI கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். மலிவான விலையில் கிடைக்க, குறைந்த திட்டங்கள், வணிகத் திட்டங்கள் மற்றும் தரவுப் பொதிகளுக்கான விருப்பங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக OpenAI கூறியுள்ளது.