
வெளியானது ஒன்பிளஸின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான 'ஒன்பிளஸ் ஓபன்'
செய்தி முன்னோட்டம்
சாம்சங் மற்றும் கூகுளைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமும் தங்களுடைய புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது. 'ஒன்பிளஸ் ஓபன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனை மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒன்பிளஸ்.
பாக்ஸியான டிசைனுடனும், இடது பக்கத்தில் அலெர்ட் ஸ்லைடரும் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒன்பிளஸ் ஓபனானது 1 லட்சம் முறை வரை மடக்கி சோதனை செய்திருக்கிறதாம் அந்நிறுவனம்.
இந்த ஃபோல்டபிள் போனில் , 120Hz ரெப்ரஷ் ரேட், 2,800 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சம் மற்றும் 2K ரெசொல்யூஷன் கொண்ட 7.82 இன்ச் உட்புற மற்றும் 6.3 இன்ச் வெளிப்புற LTPO AMOLED திரைகளைக் கொடுத்திருக்கிறது ஒன்பிளஸ்.
இதன் வெளிப்புற திரைக்கு செராமிக் கார்டைக் கொண்டு பாதுகாப்பை வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஒன்பிளஸ்
ஒன்பிளஸ் ஓபன்: வசதிகள் மற்றும் விலை
தங்களது பிற ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களைப் போலவே ஹசல்பிளாட் பிராண்டுடன் கூடிய கேமரா செட்டப்பை வழங்கியிருக்கிறது ஒன்பிளஸ்.
பின்பக்கம், 48MP முதன்மை கேமரா, 48MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கிய ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புற திரையில் 20MP செல்ஃபி கேமராவும், உட்புற திரையில் 32MP செல்ஃபி கேராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் இந்த ஒன்பிளஸ் ஓபனில் 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,800mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் வெளியாகியிருக்கும் இந்த ஒன்பிளஸ் ஒபனை இந்தியாவில் ரூ.1,39,999 விலையில் விற்பனை செய்யவிருக்கிறது ஒன்பிளஸ்.