ஒன்பிளஸ் நார்டு CE 3 vs ரியல்மீ 11 ப்ரோ, எது பெஸ்ட்?
இந்தியாவில் மிட்ரேஞ்சு செக்மெண்டில் புதிய 'நார்டு CE 3' ஸ்மார்ட்போன் ஒன்றை அடுத்த மாதம் வெளியிடவிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ். இதே செக்மெண்டில் கடந்த மே மாதமே தங்களுடைய புகிய '11 ப்ரோ' ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டிருக்கிறது அதேபோல சீனாவைச் சேர்ந்த ரியல்மீ நிறுவனம். ரூ.23,999 விலையில் தொடங்கி ரூ.27,999 வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது ரியல்மீ 11 ப்ரோ. ரூ.26,999 விலையில் தொடங்கி ரூ.28,999 வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படவிருக்கிறது நார்டு CE 3. இந்த இரண்டு மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களில் எந்த ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது? பார்க்கலாம்.
ரியல்மீ 11 ப்ரோ vs ஒன்பிளஸ் நார்டு CE 3:
இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவையே கொண்டிருக்கின்றன. CE 3-யில் 50MP ட்ரிபிள் கேமரா செட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 11 ப்ரோவில் 100MP டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. CE 3-யில் ஸ்னாப்டிராகன் 782G ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 11 ப்ரோவில் டைமன்சிட்டி 7050 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 11 ப்ரோவானது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கும் நிலையில், CE 3 ஆனது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கிறது. தினசரிப் பயன்பாட்டிற்கு சிறந்த ஸ்மார்ட்போனாக ரியல்மீயின் 11 ப்ரோ இருக்கும் என்றாலும், அனைத்து அம்சங்களிலும் சற்று மேம்பட்ட செயல்பாட்டைக் கொண்டு ஒரு ஆல்-ரவுண்டராக இருக்கிறது நார்டு CE 3.