ஒன்பிளஸின் புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன், நார்டு 3 எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
ஒரு ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கான அம்சங்களுடன் புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். தற்போது விற்பனை செய்யப்பட்ட வரும் நார்டு 2T-யின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இந்த புதிய நார்டு 3-யை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். எப்படி இருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்போன்? பார்க்கலாம். வசதிகள்: 6.74 இன்ச் Super Fluid AMOLED டிஸ்பிளே மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸர் 50MP+8MP+2MP ரியர் கேமரா: 16MP செல்ஃபி கேமரா 5000 mAh பேட்டரி 80W சார்ஜிங் வசதி ஆண்ட்ராய்டு 13 விலை: 8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.33,999 16 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.37,999
ஒன்பிளஸ் நார்டு 3: பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
ரூ.40,000 ரூபாய்க்குள்ளான ஸ்மார்ட்போன் செக்மெண்டில் சிறந்த ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். பில்ட் குவாலிட்டி, டிஸ்பிளே முதல் கேமரா பெர்ஃபாமன்ஸ் வரை பயன்பாட்டுக்கு மிகச்சிறப்பாக இருக்கிறது இந்த நார்டு 3. 5,000mAh பேட்டரி ஒரு நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்கும் நிலையில், 80W சார்ஜிங் வசதியின் மூலம் 40 நிமிடங்களில் முழுமையான போனை சார்ஜ் செய்து விட முடிகிறது. ப்ராசஸரின் பெர்ஃபாமன்ஸூம் தரம், ஒரு ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கு இணையான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கிறது நார்டு 3-யின் டைமன்சிட்டி 9000. இந்த நார்டு 3 சறுக்கும் இடம், அல்ட்ரா-வைடு கேமராவும், IP ரேட்டிங்கும் இல்லாததும் தான். இன்னும் கொஞ்சம் சிறப்பான அல்ட்ரா-வைடு கேமராவைக் கொடுத்திருக்கலாம். இவை இரண்டையும் தவிரித்து மிகச்சிறப்பான ஸ்மார்ட்போன், இந்த ஒன்பிளஸ் நார்டு 3.