இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஒன்பிளஸ். தற்போது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன.
இணையத்தில் கசிந்த தகவல்களின் அடிப்படையில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் OS 14-ஐ பெறவிருக்கிறது.
மேலும், குவால்காமின் அடுத்த ஃப்ளாக்ஷிப் சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்பைக் கொண்டு வெளியாகவிருக்கிறது ஒன்பிளஸ் 12.
ஷாவ்மி 13-ன் அப்கிரேடட் வெர்ஷனாக வெளியாகவிருக்கும் ஷாவ்மி 14 ஸ்மார்ட்போனிலும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டே பயன்படுத்தப்படவிருப்பதாகவும் இணையத்தில் தகவல் கசிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ்
வேறு என்ன வசதிகளைக் கொண்டு வெளியாகவிருக்கிறது ஒன்பிளஸ் 12?
120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக், 5,400mAh பேட்டரியைக் கொண்டு ஒன்பிளஸ் 12 வெளியாகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50MP முதன்மை கேமரா, 50MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 64MP டெலிபோட்டோ என ட்ரிபிள் கேமரா செட்டப்பை புதிய ஸ்மார்ட்போனில் பயன்படுத்தவிருக்கிறது ஒன்பிளஸ். இத்துடன் முன்பக்கம் 32MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்படவிருக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் அலர்ட் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு டிசம்பரில் ஒன்பிளஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.