Loading...
ஊழியர்களே தேவையில்லை! ஏஐ தொழில்நுட்பத்தால் மில்லியன்களில் கல்லா கட்டும் தனிநபர் ஸ்டார்ட்அப்கள்
ஏஐ தொழில்நுட்பத்தால் மில்லியன்களில் கல்லா கட்டும் தனிநபர் ஸ்டார்ட்அப்கள்

ஊழியர்களே தேவையில்லை! ஏஐ தொழில்நுட்பத்தால் மில்லியன்களில் கல்லா கட்டும் தனிநபர் ஸ்டார்ட்அப்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2026
01:09 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், ஒரு பெரிய நிறுவனத்தை நடத்த பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தேவை என்ற பழைய விதிமுறைகள் முற்றிலும் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் முழுத் துறைகளே இணைந்து செய்து வந்த வேலைகளை, இன்று ஏஐ கருவிகள் மிக எளிதாக நொடிப் பொழுதில் செய்து முடிக்கின்றன. இதன் காரணமாக, ஊழியர்கள் யாருமின்றித் தனியொரு நபராகவே தொழிலைத் தொடங்கி, பல மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டும் சோலோ பவுண்டர்கள் (Solo Founders) எண்ணிக்கை உலகம் முழுவதும் மிகவேகமாக அதிகரித்து வருகிறது.

புள்ளிவிவரங்கள்

ஸ்டிரைப் நிறுவனத்தின் ஆச்சரியமூட்டும் புள்ளிவிவரங்கள்

உலகளவில் முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளமான ஸ்டிரைப் (Stripe) வெளியிட்டுள்ள தகவலின்படி, அதன் தளத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான தனிநபர் தொழிலதிபர்கள் ஆண்டிற்கு 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகின்றனர்.

மேலும், கடந்த 2023 முதல் 2025 வரை உள்ள காலகட்டத்தில், 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் தனிநபர் தொழிலதிபர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

வர்த்தக அனுபவமோ அல்லது பெரிய தொடர்புகளோ இல்லாத புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஏஐ ஒரு சிறந்த பிசினஸ் பார்ட்னராக மாறியுள்ளது.

ஏஐ ஸ்டார்ட்அப்

கோடி கோடியாகக் குவிக்கும் ஏஐ ஸ்டார்ட்அப்கள்

நிர்வாகப் பணிகள் முதல் கோடிங், மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை வரை அனைத்துப் பணிகளையும் ஏஐ மிகத் துல்லியமாக மேற்கொள்வதால், நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்குத் தடையின்றி உயர்த்த முடிகிறது.

உதாரணமாக, பென் புரோகா என்ற தொழிலதிபர், தனது வீட்டில் இருந்தபடியே ஏஐ உதவியுடன் இயங்கும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி, 10,000 வாடிக்கையாளர்களுடன் இந்த ஆண்டில் 10 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறார்.

இந்த அதிநவீனத் தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறிக்குமா அல்லது புதிய கதவுகளைத் திறக்குமா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

ADVERTISEMENT