ஜூலையில் வெளியாகிறதா நத்திங் போன் (2).. அதன் CEO சொல்வது என்ன?
நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான நத்திங் போன் (2)-வை வரும் ஜூலை மாதம் வெளியிடவிருப்பதாக பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ கார்ல் பெய். தங்களது முதல் ஸ்மார்ட்போனான நத்திங் போன் (1)-ஐ கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டது நத்திங் நிறுவனம். சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு தங்களது இரண்டாவது ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த புதிய போனில் ஸ்னாப்டிராகனின் ஃப்ளாக்ஷிப் ப்ராசஸரான ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸரைப் பயன்படுத்தவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தங்களது முதல் போனை விட கூடுதலாக 200mAh-உடன் 4,700mAh பேட்டரியை நத்திங் போன் (2)-வில் வழங்கவிருப்பதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் பெய்.
நத்திங் போன் (1):
நத்திங் போன் (1)-ஐ மிஞ்ரேஞ்சு செக்மெண்டிலேயே வெளியிட்டது அந்நிறுவனம். ஸ்னாப்டிராகன் 778G+ ப்ராசஸர், 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் ரூ.32,999 விலையில் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது போன் (1). 50MP டூயல் ரியர் கேமரா செட்டப், 16MP செல்ஃபி கேமரா, 4,500mAh பேட்டரி, 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை போன் (1)-ல் வழங்கியிருந்தது நத்திங். ஃப்ளாக்ஷப் ப்ராசஸருடன் வெளியிடப்படுவதால், அதன் பிற வசதிகளையும் அதற்கு இணையாகவே நத்திங் அதன் அடுத்த ஸ்மார்ட்போனில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற போன்களில் இல்லாத ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற வசதிகளையும், தனித்துவமான டிசைனையும் போன் (1)-ல் வழங்கியிருந்தது நத்திங்.