NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது 'நத்திங் போன் (2)'?: ரிவ்யூ
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது 'நத்திங் போன் (2)'?: ரிவ்யூ
    எப்படி இருக்கிறது 'நத்திங் போன் (2)'?

    பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது 'நத்திங் போன் (2)'?: ரிவ்யூ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 15, 2023
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு வெளியான நத்திங் போன் (1)-ன் அப்கிரேடட் வெர்ஷனான நத்திங் போன் (2) ஸ்மார்ட்போன் மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது நத்திங் நிறுவனம். முதல் ஸ்மார்ட்போனில் ஹார்டுவேரில் புதுமைகளை புகுத்திய நத்திங், போன் (2)-வில் சாஃப்ட்வேரில் அதனை செய்ய முயன்றிருக்கிறது.

    வசதிகள்:

    6.72 இன்ச் LTPO OLED டிஸ்பிளே

    ஸ்னார்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர்

    50MP+50 ரியர் கேமரா: 32MP செல்ஃபி கேமரா

    4,700 mAh பேட்டரி 45W ஃபாஸ்ட் சார்ஜிங்: 15W வயர்லெஸ் சார்ஜிங்: 5W ரிவர்ஸ் சார்ஜிங்

    ஆண்ட்ராய்டு 13

    விலை:

    8 GB ரேம்+128 GB ஸ்டோரேஜ்-ரூ.44,999

    12 GB ரேம்+256 GB ஸ்டோரேஜ்-ரூ.49,999

    12 GB ரேம்+512 GB ஸ்டோரேஜ்-ரூ.54,999

    மொபைல் ரிவ்யூ

    டிசனை மற்றும் பில்ட் குவாலிட்டி: 

    டிசைன் மற்றும் பில்ட் குவாலிட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறது நத்திங். எந்த இடத்திலும் பிளாஸ்டிக்கின் உபயோகமே இல்லை. அலுமினியம் மற்றும் கிளாஸைக் கொண்டே மொத்த போனையும் தயாரித்திருக்கிறது நத்திங்.

    டிசைனும் யுனிக்கான போன் (1)-ப் போலவே பாக்ஸியான டிசனைக் கொண்டிருக்கிறது. மிட்ரேஞ்ச் ஆப்பிள் ஐபோனின் உணர்வைக் கொடுக்கிறது போன் (2)-வின் டிசைன்.

    மிட்ரேஞ்ச் போனாக இருந்தாலும் டிசனைப் பொருத்தவரை ஒரு ப்ரீமியமான உணர்வைக் கொடுத்தது நத்திங் போன் (1), அதே உணர்வை போன் (2)-விலும் கொடுத்திருக்கிறது நத்திங்.

    முந்தைய மாடலைப் போல வெள்ள மற்றும் கருப்பு ஆகிய இரண்டு நிறங்களில் மட்டும் போன் (2)-வையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஆனால், இந்த முறை கொஞ்சம் கிரே ஷேடும் கலந்த கருமை நிறத்தைக் கொண்டிருக்கிறது போன் (2).

    மொபைல் ரிவ்யூ

    டிஸ்பிளே மற்றும் பேட்டரி: 

    போன் (1)-ன் டிஸ்பிளேவை விட சற்று பெரிய டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது போன் (2). முந்தைய போனில் OLED டிஸ்பிளே மட்டும் கொடுக்கப்பட்டிருக்க, புதிய போனில் LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய OLED-ஐ கொடுத்திருக்கிறது நத்திங்.

    தேவைக்கேற்ற வகையில் 1Hz முதல் 120Hz வரை ரெப்ரெஷ் ரேட்டை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ளும் இந்த டிஸ்பிளே. HDR10+ சப்போர்ட்ட மற்றும் 1,600 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸைக் கொண்டிருக்கிறது. இதனால் நல்ல சூரியஒளியிலும் போனை நம்மால் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.

    அதீதப் பயன்பாட்டிற்கு ஒரு நாள் வரை முழுதாகத் தாக்குப்பிடிக்கிறது இதன் 4,700mAh பேட்டரி. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 65 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்யவும் முடிகிறது.

    மொபைல் ரிவ்யூ

    ப்ராசஸர் பெர்ஃபாமன்ஸ்: 

    முந்தைய போனில் இருந்து பெரிய அப்கிரேடு என்றால் அது போன் (2)-வின் ப்ராசஸர் தான். குவால்காமின் கடந்தாண்டு ஃப்ளாக்ஷிப்பான் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸரைப் பெற்றிருக்கிறது நத்திங் போன் (2).

    தினசரி பயன்பாட்டிற்கும் சரி, அதீத விளையாட்டிற்கும் சரி சிறந்த பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கிறது இந்த போன் (2). கேம்கள் விளையாடும் போது கொஞ்சம் சூடாகிறது, அவ்வளவு தான். ஆனால், பெர்ஃபாமன்ஸில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை.

    மேலும், இதன் நத்திங் OS 2.0 சாஃப்டவேர் மிகச் சிறப்பான பயனர் அனுபவத்தைக் கொடுக்கிறது. நத்திங் கூறியிருப்பது போல் சாஃப்ட்வேரில் புதுமையான பல விஷயங்களைச் சேர்த்திருக்கிறது. ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தைக் கொடுக்கிறது நத்திங் போன் (2).

    மொபைல் ரிவ்யூ

    கேமரா பெர்ஃபாமன்ஸ்: 

    போன் (1)-ஐ போலவே, புதிய போனிலும் 50MP+50MP டூயல் கேமரா செட்டப்பைக் கொடுத்திருக்கிறது நத்திங். 50MP IMX890-ஐ முதன்மைக் கேமராவாகக் கொடுத்திருக்கிறது நத்திங். இதன் செயல்பாடும் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது.

    இரண்டாவதாக 50MP சாம்சங் JN1 அல்ட்ரா-வைடு கேமரா. இந்த இரண்டாவது கேமராவின் பெர்ஃபாமன்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் எனத் தோன்ற வைக்கிறது. இந்த அல்ட்ரா-வைடு கேமராவே மேக்ரோ கேமராவாகவும் செயல்படுகிறது.

    முன்பக்கம் 32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும், குறைகள் சொல்லுமளவு எதுவும் இல்லை. சிறப்பான புகைப்படங்களையே கொடுக்கிறது.

    முக்கியமாக இந்த நத்திங் கேமராக்கள் இரவிலும், குறைவான வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களைக் கொடுக்கின்றன. வீடியோ ரெக்கார்டிங்கும் குறை கூறும் அளவிற்கு இல்லை, நன்றாகவே இருக்கிறது.

    மொபைல் ரிவ்யூ

    இறுதியாக.. 

    அப்பர் மிட்-ரேஞ்சு செக்மெண்டில் ஒரு சிறந்த தேர்வாக வெளியாகியிருக்கிறது இந்த நத்திங் போன் (2). மேலும், நத்திங் போன் (1)-ன் அப்கிரேடு என்பதற்கும் கொஞ்சம் நியாயம் சேர்த்திருக்கிறது.

    இதன் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கின்றன, விலையைத் தவிர. 40,000 ரூபாய்க்குள்ளான விலையில் வெளியாகியிருந்தால், நிச்சயமாக சிறப்பான போன் என இதனைக் கொண்டாடியிருக்கலாம். ஆனால், விலைக்கு முழுவதுமாக நியாயம் சேர்க்கவில்லை இந்த நத்திங் போன் (2).

    வயர்லெஸ் சார்ஜிங், தனித்துவமான டிசைன் மற்றும் கிளிப் லைட்டைத் தவிர்த்துப் பார்த்தால், இதனைவிட குறைவான விலை கொண்ட போன்கள் கொடுக்கும் அதே பெர்ஃபாமன்ஸையே கொடுக்கிறது இந்த நத்திங் போன் (2).

    தற்போதைய நிலையில் ஒன்பிளஸ் 11R இதனை விட சிறந்த தேர்வாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மொபைல் ரிவ்யூ
    ஸ்மார்ட்போன்
    மொபைல்
    கேட்ஜட்ஸ் ரிவ்யூ

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மொபைல் ரிவ்யூ

    எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ!  மொபைல்
    எப்படி இருக்கிறது ஒன்பிளஸ் 11R 5G: ரிவ்யூ!  மொபைல்
    ரியல்மீயின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்... 'ரியல்மீ C55' எப்படி இருக்கிறது? ரியல்மி
    விவோவின் புதிய T2 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ  ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் BGMI சர்வர்கள் செயல்பாட்டிற்கு வந்தன.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது விளையாட்டு நிறுவனம்! இந்தியா
    சில ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் கூடுதல் வாரண்டியை அறிவித்திருக்கிறது ஷாவ்மி! தொழில்நுட்பம்
    கேம் விளையாடுவதற்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம்.. ஐகூ நிறுவனம் அறிவிப்பு! கேம்ஸ்
    எப்படி இருக்கிறது 'ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் 5G'?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ

    மொபைல்

    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்

    கேட்ஜட்ஸ் ரிவ்யூ

    சாம்சங்கின் புதிய 'கேலக்ஸி F54', பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    எப்படி இருக்கிறது 'இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G' ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    எப்படி இருக்கிறது ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ்?: ரிவ்யூ ரெட்மி
    கூகுள் பிக்சல் டேப்லட் vs ஒன்பிளஸ் பேடு, எது பெஸ்ட்? டேப்லட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025