பெங்களூருவில் அமைக்கப்பட்ட நத்திங் பாப்-அப் ஸ்டோரில் திரண்ட வாடிக்கையாளர்கள்
கடந்த வாரம் தங்களது புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'போன் (2)'வை உலகம் முழுவதும் வெளியிட்டது நத்திங். தொடக்கவிலையாக ரூ.44,999 விலையில் தங்களது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது நத்திங். இந்த புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை, ஆன்லைனில் வரும் ஜூலை 21 இரவு 12 மணி முதல் தொடங்கவிருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே தங்களுடைய தற்காலிக பாப்-அப் ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலம் புதிய ஸ்மார்ட்போனை விற்பனை செய்யவிருப்பதாக முன்பே அறிவித்திருந்தது நத்திங். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் 'டிராப்ஸ்' எனப் பெயரிடப்பட்ட இந்த புதிய பாப்-அப் ஸ்டோர்களை அமைத்திருந்தது நத்திங் நிறுவனம். இந்தியாவிலும் பெங்களூருவில் உள்ள லூலூ மாலில் தங்களுடைய பாப்-அப் ஸ்டோரை அமைத்திருந்தது நத்திங்.
பாப்-அப் ஸ்டோரில் திரண்ட நத்திங் ரசிகர்கள்:
கடந்த ஜூலை 14 முதல் 16 வரை இந்த பாப்-அப் ஸ்டோரில் நத்திங் போன் (2) ஸ்மார்ட்போனையும், கருப்பு நிற நத்திங் இயர் (2) இயர் பட்ஸையும் விற்பனை செய்யது அந்நிறுவனம். இந்த பாப்-அப் ஸ்டோரில் புதிய நத்திங் ஸ்மார்ட்போனை வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள். மூன்று வேரியன்ட்களாக தங்களுடைய புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருந்துத நத்திங். ரூ.44,999, ரூ.49,999 மற்றும் ரூ.54,999 ஆகிய விலைகளில் இந்தியாவில அந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டிருந்தன. நத்திங் இயர் (2) இயர் பட்ஸானது, முன்னர் வெள்ளை நிறத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக கருப்பு நிறத்திலும் ரூ.9,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.