Page Loader
CMF என்ற புதிய பிராண்டிங்கை அறிமுகப்படுத்திய நத்திங்
CMF என்ற புதிய பிராண்டிங்கை அறிமுகப்படுத்திய நத்திங்

CMF என்ற புதிய பிராண்டிங்கை அறிமுகப்படுத்திய நத்திங்

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 04, 2023
04:46 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில ஆண்டுகளில் மூன்று இயர் பட்ஸ்கள் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸின் முன்னாள் சிஇஓ-வின் தலைமையிலான புதிய நத்திங் நிறுவனம். சந்தைக்கு வந்து சில ஆண்டுகள் தான் எனினும், தங்களுக்கென தனி முத்திரையைப் பதித்திருக்கிறது நத்திங். முக்கியமாக, வெளித்தோற்றத்தில் புதுமையைப் புகுத்திய நத்திங்கின் முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது. கடந்த மாதம் தான் தங்களுடைய இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் (2)-வை வெளியிட்டது நத்திங் நிறுவனம். இந்நிலையில் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஒரு இயர் பட்ஸை அந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நத்திங்

நத்திங்கின் துணை பிராண்டு: 

'CMF by Nothing' என்ற துணை பிராண்டு ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார் நத்திங்கின் சிஇஓ கார்ல் பெய். மேற்கூறிய இரண்டு புதிய சாதனங்களையும் இந்தப் புதிய துணை பிராண்டின் கீழேயே அந்நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இந்த புதிய பிராண்டின் கீழ் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஏர்பட்ஸைத் தொடர்ந்து பல்வேறு புதிய மின்னணு சாதனங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது நத்திங். நத்திங் பிராண்டிங்கின் கீழ் ப்ரீமியமான தயாரிப்புகளை மட்டுமே வழங்கவிருக்கும் நிலையில், CMF பிராண்டிங்கின் கீழ் அனைவரும் வாங்கக் கூடிய விலையிலான, அதே சமயம் நத்திங்கின் டிசைன் லாங்குவேஜைக் கொண்ட மாடல்களைத் தயாரித்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஆப்பிளைப் போலவே நத்திங் எக்கோசிஸ்டம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக முன்பே தனது விருப்பத்தைத் கார்ல் பெய் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.