புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகப்படுத்தியிருக்கிறது நாய்ஸ்
இந்தியாவைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான நாய்ஸ் (Noise), புதிய ஸ்மார்ட் கேட்ஜட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 'கலர்ஃபிட் த்ரைவ்' என்ற புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஒன்றை அந்நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 550 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தை கொண்ட 1.85 இன்ச் சதுர வடிவ டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது நாய்ஸ் கலர்ஃபிட் த்ரைவ். அதிகபட்ச வெளிச்சத்தைக் கொண்டிருப்பதால், சூரிய ஒளிக்குக் கீழும் சிறப்பான பயன்பாட்டு அனுபவத்தை புதிய த்ரைவ் கொடுக்கும் எனத் தெரிவித்திருக்கிறது நாய்ஸ். கூகுள் மற்றும் சிரி ஆகிய AI வாய்ஸ் அசிஸ்டன்ஸ் வசதியுடன் கூடிய தடையில்லா ப்ளூடூத் காலிங்கை இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கிறது நாய்ஸ்.
நாய்ஸ் கலர்ஃபிட் த்ரைவ்:
ஆறு நிறங்களில் இந்த புதிய கலர்ஃபிட் த்ரைவை வெளியிட்டிருக்கிறது நாய்ஸ். மேலும், நாய்ஸ் பஸ் வசதியுடன் கனெக்டிவிட்டியும் மிகவும் இலகுவாகும் அதிக பயனுள்ளதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் ஹிஸ்டரியை ஸ்மார்ட்வாட்ச்சிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ள முடிகிற நிலையில், எட்டு தொடர்புகள் வரை இந்த ஸ்மார்ட்வாட்ச்சிலேயே சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதயத் துடிப்பு, SpO2 மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்வாட்ச்சின் மூலமே அளக்கவும் வசதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கிறது இதன் பேட்டரி. IP67 ரேட்டிங்கைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சானது, ரூ.1,299 விலையில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.