அவசர பாதுகாப்பு எச்சரிக்கை: கூகுள் குரோமில் புதிய ஸிரோ-டே பாதிப்பு கண்டறியப்பட்டது
கூகுள் குரோம், தன்னுடைய கோடிங்கில் சமீபத்தில் ஒரு புதிய ஸிரோ-டே பாதிப்பை அடையாளம் கண்டுள்ளது. இது அன்றாட பயனர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் கவலைகளை எழுப்புகிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாதுகாப்புக் குறைபாடுகளின் முக்கியமான தன்மையை கோடிட்டுக் காட்டும் வகையில், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) உயர்-தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. CERT-In இன் சமீபத்திய பாதுகாப்பு அறிக்கைப்படி, கூகுள் க்ரோமில் உள்ள பாதிப்புகள் ஒரு பயனரின் கணினியில் சமரசம் செய்து, ரிமோட் தாக்குதலை அனுமதிக்கும். அடையாளம் காணப்பட்ட சிக்கல்களில், விஷுவல்ஸ் மற்றும் ஆங்கிள்களில் ஏற்படும் use-after-free error மற்றும் WebAudioஇல் ஹீப் பஃபர் ஓவர்ஃப்ளோ ஆகியவை அடங்கும்.
Google Chrome இன் பாதிக்கப்பட்ட பதிப்புகள்
பல்வேறு இயக்க முறைமைகளில் உள்ள கூகுள் க்ரோமின் குறிப்பிட்ட பதிப்புகளைப் பாதிப்புகள் பாதிக்கின்றன. அவை பின்வருமாறு: விண்டோஸ் மற்றும் மேக்: 124.0.6367.201/.202க்கு முந்தைய பதிப்புகள் லினக்ஸ்: 124.0.6367.201க்கு முந்தைய பதிப்புகள் இந்த பாதிப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், கூகுள் குரோமுக்கான புதுப்பிப்பை விரைவாக வெளியிட்டுள்ளது கூகுள். சாத்தியமான ஹாக்கிங்கிலிருந்து தங்கள் சாதனங்களைப் பாதுகாக்க பயனர்கள் தங்கள் பிரௌசர்களை சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிப்பது அவசியம். பின்வரும் ஸ்டெப்ஸ்-ஐ பின்பற்றுவதன் மூலம் பயனர்கள் தங்கள் Google Chrome ஐப் புதுப்பிக்கலாம்:
கூகுள் க்ரோமை புதுப்பிக்கும் வழிமுறை
உங்கள் பிரௌசரின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளி மெனுவிற்கு செல்லவும். 'செட்டிங்ஸ்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 'Chrome பற்றி' என்பதற்குச் செல்லவும். 'Chrome ஐப் புதுப்பி ' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தரவு மற்றும் சாதனங்களின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் பராமரிக்க, Chrome ஐப் புதுப்பித்தல் கடுமையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.