
புதிய PS5 வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் மற்றும் சோனி இணைந்து வழங்கும் புதிய சலுகை
செய்தி முன்னோட்டம்
சோனி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து தங்களுடைய புதிய பயனாளர்கள் மற்றும் மறுபயனாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
புதிய PS5 கேமிங் கன்சோலை வாங்குபவர்களுக்கும் மற்றும் குறிப்பிட்ட ஆப்பிள் மியூசிக் மறுபயனாளர்களுக்கு மட்டும் ஆறு மாதங்கள் வரை விளம்பரமில்லா ஆப்பிள் மியூசிக் பயன்பாட்டை இலவசமாக வழங்கவிருக்கிறது ஆப்பிள்.
2024 நவம்பர் 15ம் தேதி வரை இந்த சலுகையை வழங்கத் திட்டமிட்டிருக்கின்றன அந்நிறுவனங்கள். ஆனால், ஆறு மாத காலம் இலவச பயன்பாட்டுக் காலம் முடிந்த பிறகு, பிற ஆப்பிள் மியூசிக் வாடிக்கையாளர்களைப் போல மாதத்திற்கு குறிப்பிட்ட சந்தாவைச் செலுத்தியே அந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.
ஆப்பிள்
இந்த சலுகையை எப்படிப் பயன்படுத்துவது?
இதனைப் பயன்படுத்த, (அனைத்து வகையான) PS5 கேமிங் கன்சோல் மூலம் ஆப்பிள் மியூசிக் செயலியைத் தேர்ந்தெடுத்து அதில் உள்நுழைந்தால் போதும்.
அதன் பின்னர் அந்த உள்நுழைவுத் தகவல்களைக் கொண்டே பிற சாதனங்களிலும் குறிப்பிட்ட பயனரால் ஆப்பிள் மியூசிக் சேவையை ஆறு மாத காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா உட்பட 68 நாடுகளில் இந்தப் புதிய சலுகையை PS5 வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கின்றன ஆப்பிள் மற்றும் சோனி நிறுவனங்கள்.
மேலும் இந்த இலவச சலுகை ஆப்பிள் பயனாளர்களுக்கு ஆப்பிள் மியூசிக் சேவையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, அனைத்து வகையான கட்டண பயன்பாடுகளையும் இந்த இலவச பயனாளர்கள் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.