3I/ATLAS உண்மையிலேயே வேற்று கிரக விண்கலமா? நாசா விளக்கம்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜூலை 1, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்ட 3I/ATLAS என்ற நட்சத்திரங்களுக்கிடையேயான வால்மீன், வேற்று கிரக விண்கலமாக இருக்கலாம் என்ற இணைய வதந்திகளை நாசா மறுத்துள்ளது. இந்த வால்மீன், பூமியை விட மிகப் பழமையானது என்றும், இதன் வயது சுமார் 5 முதல் 8 பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் வைட்சைட்ஸ் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
நாசா
நாசாவின் பரந்த கண்காணிப்பு
இந்த வால்மீன் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, நாசா சூரிய மண்டலம் முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த கண்காணிப்புப் பணியைத் தொடங்கியது. நாசாவின் விண்கலங்கள் மற்றும் விண்வெளித் தொலைநோக்கிகள் உட்பட பன்னிரண்டு கண்காணிப்புச் சாதனங்கள் இந்த வால்மீனின் படங்களைக் கைப்பற்றியுள்ளன. செவ்வாய் கிரகத்தின் அருகே 19 மில்லியன் மைல் தொலைவில் வால்மீன் கடந்து சென்றபோது, நாசாவின் MRO மற்றும் MAVEN போன்ற செவ்வாய் சுற்றும் விண்கலங்கள் அதன் கலவை குறித்த முக்கியமான தரவுகளைச் சேகரித்தன. செவ்வாயின் தரையில் உள்ள பெர்சவரன்ஸ் ரோவர் கூட இதைக் கண்டது.
முக்கியம்
ஏன் இது முக்கியம்?
3I/ATLAS வால்மீன் நமது சூரிய மண்டலத்தின் ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பயணிப்பதால், இது அயல் நட்சத்திர அமைப்பிலிருந்து உருவானது என்பதை உறுதிப்படுத்துகிறது. இது ஓமுவாமுவா (Oumuamua) மற்றும் 2I/போரிசோவ் (Borisov) ஆகியவற்றைத் தொடர்ந்து நமது சூரிய மண்டலத்தைக் கடந்து செல்லும் மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட அயல் நட்சத்திரப் பொருள் ஆகும். இதன் அமைப்பு மற்றும் செயல்பாடு பற்றிய ஆய்வுகள், பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அயல் நட்சத்திர அமைப்புகளில் நிலவிய சூழ்நிலைகள் குறித்து விஞ்ஞானிகளுக்குத் தரவுகளைக் கொடுக்கும். வால்மீன் தொடர்ந்து பயணிக்கும் நிலையில், நாசாவும் அதன் கூட்டாளர் ஆய்வகங்களும் பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த தரவுகளைச் சேகரித்து வருகின்றன.