மார்ச் 31 தான் கடைசி - மியூச்சுவல் ஃபண்டில் நாமினி சேர்க்காவிட்டால் என்ன ஆகும்?
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நாமினி சேர்ப்பதைக் கட்டாயமாக்கி உள்ளது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் எதிர்பாராத விதமாக இறந்து போனால், அந்த ஃபண்டில் உள்ளத் தொகையைப் பெறுவதற்கு நாமினி மிகவும் முக்கியமானது. ஆனால் பலரும் முதலீட்டை மேற்கொள்ளும் போது நாமினியை தேர்வு செய்யாமல் இருந்து வருகின்றனர்.மியூச்சுவல் நிறுவனங்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அதே போல், ஒன்றுக்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், அனைத்திலும் நாமினி அப்டேட் செய்யப்பட வேண்டும். ஒரு வேளை மார்ச் 31க்குள் அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் முதலீடு நிறுத்தி வைக்கப்படும்.