டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பாமர மக்களுக்கு குறைந்த விலையில் உதவும் விதமாக டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ் எல் (TVS XL) இருந்து வந்தது. அதை தகர்க்கும் விதமாக மோட்டோவால்ட் நிறுவனம் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோவால்ட் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான எம்7 வாகனத்தை நொய்டாவில் நடந்து வரும் எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் எம்7 ஸ்கூட்டரை ஒவ்வொரு ரைடரின் பயன்பாட்டுக்கு ஏற்றது போல் வடிவமைத்துள்ளனர். அதிகமான பொருட்களை எடுத்து செல்ல ஸ்டிரென்ட்த் மற்றும் லோடு பியரிங் கேப்பாசிட்டியுடன் இதனை உருவாக்கியுள்ளனர்.
எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்கள்
பின் பக்க சீட்டை சுலபமாக அகற்றிக்கொள்ளும்படியான வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 10 கிலோ எடை கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மோட்டோவால்ட் ஆப்பில் இணைத்துக்கொள்ளலாம். இந்த வாகனத்தை வாடிக்கையாளர்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையிலும் வாங்க முடியும். இஎம்ஐயை குறைவான செலவிலும் ஸ்கூட்டரை வாங்கி கொள்ள முடியும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு முதல் முறையாக காலவரையற்ற பேட்டரி லைஃப்பை தருகிறது. இந்த பேட்டரியில், ஸ்வாப்பபிள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதை பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும். எனவே இந்த நிதியாண்டிற்குள் இந்நிறுவனம் சேவையை வழங்கி வரும் எனக்கூறப்படுகிறது.