இணையத்தில் கசிந்த புதிய மோட்டோரோலா ரேசர் 2023
பிரபல நிறுவனமான மோட்டோரோலா அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட பெரிய கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் 2.7 இன்ச் ஸ்கிரீன் உள்ள நிலையில், புதிய மாடல் 3.6 இன்ச் அல்லது இதை விட பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. இந்த போன் ஜூனோ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த பேனல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் தனித்துவ டிசைன் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் மேட் வெல்வட் AG கிளாஸ், மோட்டோரோலா மற்றும் ரேசர் லோகோ இடம்பெற்று இருக்கிறது.
புதிய மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் : அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மேலும், மேல்புறத்தில் கிளாசி கிளாஸ், பெரும்பாலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதில் 2.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோரோலா ரேசர் 2023 மாடலில் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்ற டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் நான்கு புறங்களிலும் மெல்லிய பெசல்கள், எளிதில் கண்டறிய முடியாத கிரீஸ்கள் உள்ளன. ஸ்மார்ட்போனின் ரெண்டர்களில் செல்ஃபி கேமரா இடம்பெறவில்லை, இருந்தாலும், இதில் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. தொடர்ந்து, முந்தைய மாடலின் பின்புறத்தில் உயர்த்தப்பட்ட கேமரா ஐலேண்ட், இரண்டு கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், புதிய 2023 மோட்டோரோலா ரேசர் மாடலில் கேமரா ஐலேண்ட் வழங்கப்படவில்லை.