UPI- இந்தியர்களைக் கெடுக்கிறது - இணையத்தில் வைரலாகும் ட்விட்டர் பதிவு!
நவீன டிஜிட்டல் உலகின் மூலம் பல பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் நடக்கிறது. மக்கள் சின்ன சின்ன தொகையைக்கூட பேடிஎம், கூகுள் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி செலுத்தி வருகின்றனர். ஒரு பக்கம் யூபிஐ தேவை எளிதாக இருந்தாலும், பல ஆபத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இந்நிலையில், ட்விட்டர் பயனரான ராதிகா குப்தா என்பவர், "நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதுதான் இந்தியாவில் UPI நம்மை எவ்வளவு கெடுத்து விட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்" எனக்கூறியுள்ளார். இவரின் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.