Page Loader
இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள்
இந்திய சிங்கப்பூர் யூபிஐ-களை தொடங்கிய இரு நாட்டு பிரதமர்கள்

இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள்

எழுதியவர் Siranjeevi
Feb 21, 2023
02:16 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகிய இரண்டும் இன்று முதல் இணைக்கப்பட உள்ளதை அடுத்து இரு நாட்டு பொதுமக்கள் இந்த இரண்டு செயலிகளில் இருந்தும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியன் லூங் முன்னிலையில் இந்த இணைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையாக இந்த இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் டிஜிட்டல் பேமென்ட் முறையை அறிமுகம் செய்தது.

யூபிஐ பேமண்ட்ஸ்

இந்தியா மற்றும் சிங்கப்பூரின் யூபிஐ பரிவர்த்தனைகள் தொடக்கம்

இதனால், UPI மூலம் பண பரிமாற்றம் செய்யும் வழக்கம் தற்போது நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியன் லூங் முன்னிலையில் இந்த இணைப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையாக இந்த இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும், சிங்கப்பூரில் மிக வேகமாக இயங்கி வரும் பேநெள செயலி, இந்தியாவின் யூபிஐ தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு வங்கிகளுக்கு பணம் அனுப்பும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.