Page Loader
விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான அப்டேட் நிறுத்தத்தால் அதிகரிக்கவிருக்கும் மின்னணு கழிவுகள்
விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான அப்டேட் நிறுத்தத்தால் அதிகரிக்கவிருக்கும் மின்னணு கழிவுகள்

விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான அப்டேட் நிறுத்தத்தால் அதிகரிக்கவிருக்கும் மின்னணு கழிவுகள்

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 22, 2023
11:22 am

செய்தி முன்னோட்டம்

2021ம் ஆண்டு வெளியான மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் 11 இயக்குதளம் தற்போது பரவலாக பயனாளர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு புதிய இயங்குதளமான விண்டோஸ் 12 இயங்குதளத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இந்த காரணங்களால், தங்களுடைய பழைய இயங்குதளமான விண்டோஸ் 10-க்கான அப்டேட்களை நிறுத்த முடிவெடுத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விண்டோஸ் 10 இயங்குளத்திற்கான அப்டேட்களை நிறுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். எனினும், 2028ம் ஆண்டு வரை விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு தேவையான பாதுகாப்பு அப்டேட்கள் மட்டும் வழங்கப்படும் எனவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட்

அதிகரிக்கவிருக்கும் மின்னணு கழிவுகள்? 

மைக்ரோசாஃப்டின் இந்த முடிவால் மின்னணு கழிவுகள் அதிகரிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருந்து விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கு அப்டேட் செய்ய முடியாத பல்வேறு லேப்டாப்கள் மற்றும் கணினிகள் மைக்ரோசாஃப்டின் இந்த முடிவால் மின்னணு கழிவுகளாக மாறும். சில ஆண்டு கால ஆயுள் கொண்ட லேப்டாப்களும் கூட தேவைக் குறைவால் மின்னணு கழிவாகக்கூடும். மைக்ரோசாஃப்டின் இந்த முடிவால் 240 மில்லியன் தனிநபர் கணினிகள் மின்னணு கழிவுகளாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவானது 3,20,000 கார்களுக்கு சமமாகும். இப்படி மின்னணு கழிவுகளால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்த கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் மைக்ரோசாஃப்ட் இன்னும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.