மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?
மைக்ரோசாஃப்டின் விளம்பர சேவைத்தளத்தில் இனி ட்விட்டர் சேவைகள் செயல்படாது என அறிவித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். ட்விட்டர் API சேவையைப் பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரியில் அறிவித்தது ட்விட்டர். அதனைத் தொடர்ந்தே தற்போது இந்த அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்டின் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க்கும் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், ட்விட்டரின் தகவல்களை தவறான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டியிருக்கும் எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மைக்ரோசாஃப்டின் விளம்பர சேவைத்தளத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு மேலாண்மை செய்யும் வசதி இருந்தது. தற்போது அதில் தான் ட்விட்டர் சேவைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.