NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / போலி தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மெட்டா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    போலி தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மெட்டா?
    போலி தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மெட்டா

    போலி தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மெட்டா?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 03, 2023
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் முக்கிய பிரச்சினையாக வளர்ந்திருப்பது, போலி தகவல் பரவல் மற்றும் பரப்பல் தான்.

    சாதாரண நேரங்களைவிட, தேர்தல் சமையங்களில் இந்த போலி தகவல் பரவல் அதிகரிப்பதோடு, சமூகத்தில் அதனால் ஏற்படும் தாக்கமும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

    இந்நிலையில், தங்களுடைய தளங்களில் போலி தகவல் பரவல் மட்டுமின்றி, போலி கணக்குகள் உருாக்கம் தொடர்பான புதிய பிரச்சினை ஒன்றையும் எதிர்கொண்டு வருகிறது மெட்டா.

    சீனாவில், அமெரிக்கர்களின் பெயரில் ஆயிரக்கணக்கான போலி சமூக வலைத்தளக் கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் போலியான தகவல்கள் பரப்பப்படுவது அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மெட்டா

    ஆயிரக்கணக்கான கணக்குகளை முடக்கிய மெட்டா: 

    அப்படி அமெரிக்கர்களின் பெயரில் உருவாக்கப்படும் கணக்குகளானது, போலியான கணக்கு என்பதைக் கண்டறிய முடியாத வகையிலான பதிவுகளையும் இட்டு வருகின்றன.

    தற்போது அப்படி சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த 4,800 போலி கணக்குகளை முடக்கியிருக்கிறது மெட்டா. மேலும், இந்த கணக்குகளுக்கும் சீன அரசுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் நிலையில், அதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வகையில் உருவாக்கப்படும் கணக்குகள் நேரடியாக தவறான தகவல்களைப் பரப்பாமல், எக்ஸ் தளத்திலிருந்து அது தொடர்பான இணைப்புகளை மட்டும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையை விரைவில் களைய வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூக வலைத்தளம்

    இந்தியாவிலும் களையெடுக்கப்பட வேண்டிய பிரச்சினை: 

    இந்தியாவிலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இதே போன்ற போலி தகவல் பரவல் என்பது இங்கும் பெரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

    மேலும், மேற்கூறிய அமெரிக்க தோல் போர்த்திய சில கணக்குகள், இந்திய பெயர்களுக்கு மாற்றப்பட்டு சீனாவிற்கு ஆதரவான கருத்துக்களைப் பகிர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இது போன்ற போலி தகவல் பரவல் மற்றும் போலி கணக்குகள் பிரச்சினை மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டிய தேவை மிக அதிகமாகவே எழுந்திருக்கிறது.

    சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான தகவல்கள் சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் அந்நிறுனங்களுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமூக வலைத்தளம்
    மெட்டா
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    சமூக வலைத்தளம்

    ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா? பாலிவுட்
    எக்ஸ் சேவையை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறுத்தும் எலான் மஸ்க்? எக்ஸ்
    மூன்று நிலை கட்டண சேவையை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ்.. எலான் மஸ்க் பதிவு எக்ஸ்
    வெரிஃபைடு பயனாளர்களின் பதிவுகளுக்கு தனிப் பக்கம் அளிக்கும் இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம்

    மெட்டா

    மொபைல் எண்ணைக் கொண்டு கணினியில் லிங்க் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ அழைப்பில் அவதார் பயன்படுத்துவது எப்படி? இன்ஸ்டாகிராம்
    ட்விட்டருக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்களிடையே மதிப்பிழந்து வரும் Threads ட்விட்டர்
    குறுகிய காலத்தில் 150 மில்லியன் பயனர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டிய 'Threads' ட்விட்டர்

    உலகம்

    பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக பேசியதால் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம்  பிரிட்டன்
    பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா இந்தியா
    அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு இந்தியா
    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அமெரிக்கா

    அமெரிக்கா

    அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அலுவலகம் செல்பவர்களுக்காக விரைவில் ஊபர் பஸ் சேவை உபர்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை துப்பாக்கி சூடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025