
10,000 பணியாளர்கள் பணிநீக்கம்.. புதிய திட்டத்தில் மெட்டா நிறுவனம்!
செய்தி முன்னோட்டம்
2023 தொடங்கியதில் இருந்த பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. உலகமெங்கும் உள்ள பல டெக் நிறுவனங்கள் இணைந்து 2023-ல் மட்டும் 1,50,000 பணியாளர்களுக்கும் மேல் பணிநீக்கம் செய்திருக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா. இது அந்நிறுவனத்தின் பணியாளர்களில் 13% ஆகும்.
மேலும், புதிய பணியமர்த்தல்களையும் அந்நிறுவம் நிறுத்தி வைத்திருந்தது. தற்போது அந்நிறுவனம் மேலும் ஒரு பணிநீக்க சுற்றுக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தொழில்நுட்பம்
மீண்டும் பணிநீக்கம்:
இந்த மாதம் தொடங்கி பல பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கிறது மெட்டா நிறுவனம். 10,000 பணியாளர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதில் மெட்டாவின் சமூக வளைத்தள நிறுவனங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் வன்பொருள் நிறுவனமான ரியாலிட்டி லேப்ஸ் என அனைத்து நிறுவன பணியாளர்களும் பணிநீக்க அறிவிப்பில் இடம்பெறவிருப்பதகாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகளில் மார்க் ஸூக்கர்பர்க் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
இந்தப் பணிநீக்கத்தைத் தொடர்ந்து நிறுவனம் மறுவடிவமைப்பு செய்யப்படும் எனவும், எஞ்சியிருக்கும் பணியாளர்கள் புதிய பணிகளில் புதில மேலாளர்களுக்கு கீழ் வேலை செய்ய வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.