Loading...
இனி இன்ஸ்டா, வாட்ஸ்அப்பிற்கு மாதக் கட்டணமா? மெட்டா வெளியிட்ட 'Meta One' திட்டம்
மெட்டா வெளியிட்ட 'Meta One' திட்டம்

இனி இன்ஸ்டா, வாட்ஸ்அப்பிற்கு மாதக் கட்டணமா? மெட்டா வெளியிட்ட 'Meta One' திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
01:56 pm

செய்தி முன்னோட்டம்

சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் தனித்தனியாகச் சந்தா முறைகளை அறிமுகப்படுத்திய மெட்டா நிறுவனம், தற்போது அனைத்துச் சேவைகளையும் அதிநவீன AI கருவிகளுடன் ஒருங்கிணைத்து 'மெட்டா ஒன்' என்ற புதிய சந்தா சேவையை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. மெட்டா ஒன் சேவை மூலம் இன்ஸ்டாகிராம் பிளஸ், வாட்ஸ்அப் பிளஸ் மற்றும் பேஸ்புக் பிளஸ் ஆகியவை ஏஐ கருவிகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் மெட்டா ஏஐ ஆகியவற்றின் வழக்கமான அடிப்படைச் சேவைகள் தொடர்ந்து இலவசமாகவே கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் தெளிவாக அறிவித்துள்ளது. இருப்பினும், கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் அதிக அளவிலான ஏஐ பயன்பாடுகளை விரும்பும் பயனர்கள் இந்தக் கட்டணச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரீமியம் திட்டங்கள்

தனிநபர் பயனர்களுக்கான கோர் மற்றும் பிரீமியம் திட்டங்கள்

தனிநபர் பயனர்களுக்காக 'கோர்' மற்றும் 'பிரீமியம்' என இரண்டு வகையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கோர் திட்டம் மாதத்திற்கு $7.99 (சுமார் ₹766) கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

இதில் பயனர்கள் மெட்டா ஏஐ மூலம் அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்க முடியும்.

மேலும், $19.99 (சுமார் ₹1,917) மதிப்பிலான பிரீமியம் திட்டத்தின் மூலம் ஏஐ கருவிகளை எல்லைகளின்றி முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

சிறப்பு அம்சங்கள்

படைப்பாளிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு அம்சங்கள்

இன்ஃப்ளூயன்சர்கள், உள்ளடக்க படைப்பாளிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்காக எசென்ஷியல்($14.99 - சுமார் ₹1,437), அட்வான்ஸ்டு($49.99 - சுமார் ₹4,794), எக்ஸ்பர்ட்($149 - சுமார் ₹14,290) மற்றும் மேக்ஸ்($499 - சுமார் ₹47,860) ஆகிய நான்கு சிறப்புத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டங்களின் மூலம் அதிகாரப்பூர்வ கணக்கு பேட்ஜ், கணக்கு பாதுகாப்பு, வாட்ஸ்அப் பிசினஸ் ஏஐ ஆதரவு மற்றும் மேம்படுத்தப்பட்ட அனாலிடிக்ஸ் தரவுகளைப் பெற முடியும்.

அட்வான்ஸ்டு திட்டத்தைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் தங்களது ஸ்டோரீஸ்களை 31 நாட்களுக்கு முன்பே ஷெடியூல் செய்யவும், சாதாரண போஸ்ட்கள் மற்றும் ரீல்ஸ்களில் லிங்க் இணைக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்ட சோதனையில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் ஏஐ கருவிகள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீஸ்டைல் போன்ற அம்சங்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT