8 வருடம் பணியாற்றிய மெட்டா ஊழியர் பணிநீக்கம் - உருக்கமான பதிவு!
உலகளவில் பல நிறுவனங்கல் கொரோனா காலக்கட்டத்துக்கு பின் பணிநீக்கம் நடவடிக்கையில் இறங்கி வந்துள்ளன. அதன்படி, கூகுள், ட்விட்டர் மற்றும், அமேசான் என பல நிறுவனங்கள் தங்களது லட்சக்கணக்கான ஊழியர்களை கடந்த 10 மாதங்களில் மட்டும் பணிநீக்கம் செய்துள்ளனர். அதில், முக்கியமாக மெட்டா கடந்த நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதன் பின்னும் பணிநீக்கத்தை தொடர்ந்த மெட்டா நிறுவனம், வெளியேறிய ஊழியர்கள் லிங்க்ட் இன் பக்கத்தில் வருத்தத்தை பதிவு செய்ய தொடங்கி வருகின்றனர்.
தொடரும் மெட்டா நிறுவனத்தின் பணிநீக்கம் - ஊழியர்கள் உருக்கம்
அந்த வகையில், முன்னாள் மெட்டா ஊழியர் 8 வருடத்திற்கு பின் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியை நிறுவனத்தில் சந்தித்ததாகவும், பேஸ்புக்கில் பணிபுரிந்த நேரம் தனது வாழ்க்கையை மாற்றியதாகவும் குறிப்பிட்டார். மேலும் எனது அடையாளத்தையும் விட்டுவிட்டேன் என்று நான் நிம்மதியாக உணர்கிறேன். எனவே உலகின் மிகக் கடினமான சில பிரச்சனைகளை உலகின் புத்திசாலித்தனமான மனிதர்களுடன் நான் இனி ஆராயமாட்டேன் என்பதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது என நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.