ஃபேஸ்புக் நிறுவனத்தில் மீண்டும் அடுத்த கட்ட பணிநீக்கம் - ஊழியர்கள் அதிர்ச்சி!
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு சுமார் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊழியர்களுக்கு அதிர்ச்சியை தந்திருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது நடப்பு ஆண்டும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மெட்டா தெரிவித்து இருக்கிறது. ஊழியர்கள் பணி நீக்கம் பொருளாதார மந்த நிலை காரணமாக பல நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுப்பட்டு வருகின்றன. பெரிய நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட் , கூகுள், டிவிட்டர், டெல், வால்ட் டிஸ்னி, டிக்டாக் இந்தியா, இன்ஃபோசிஸ், போன்ற நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்த நிலையில் மீண்டும் பணிநீக்கம் செய்யும் ஃபேஸ்புக் நிறுவவனம்
அதன்படி இந்த ஆண்டில் மட்டும் 104 தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 26,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மெட்டாவின் மீண்டும் பணிநீக்கம் ஏன்? அந்த வகையில், பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா சுமார் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் மீண்டும் பணிநீக்கம் செய்யப்போவதாக வெளியிட்ட தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது, ஐடி துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நீக்கத்தில், நிறுவனத்தின் மேலாளர் உள்பட ஒரு சில முக்கிய பதவிகளில் இருப்பவர்களையும் பணி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.