வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து திடீரென 20% ஊழியர்கள் வெளியேற்றம்!
பொருளாதார மந்த நிலை காரணமாக பல தனியார் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்பிள், மெட்டா, மற்றும் அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் போட்டி, வருவாய் ஈட்ட முடியாமல் முடியாத நெருக்கடி, பணவீக்கம் உள்ளிட்ட பல விதமான சிக்கலை எதிர்கொள்ள முடியாமல் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகமெங்கும் 104,000 பேர் பணிபுரியும் வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அதாவது, நிறுவனம் பணி நீக்க நடவடிக்கைகள் அல்லாமல், 20 சதவீத ஊழியர்கள் வோடபோன் - ஐடியாவில் இருந்து தானாகவே வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வோடஃபோன், ஐடியா ஊழியர்கள் தொடர்ந்து வெளியேற்றம்
இந்த ஊழியர்கள் வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை. சம்பளம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதைப் பற்றி எந்த அறிக்கையும் இல்லை. வோடஃபோன் நிறுவனத்தின் வருமானம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. நிறுவனம் லாபத்தை சமநிலைப்படுதடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வோடஃபோன், தனது நிறுவனத்தின் மதிப்பில் 40% அளவுக்கு வருவாயை இழந்துள்ளது. இதனால் தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ரீடும் தனது பதவியில் இருந்து விலகினார். அவருக்கு மாற்றாக, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான பணியாற்றி வரும் Margherita Della Valle, நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். வோடஃபோன் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேறியது ஒரு பக்கம் இருக்க, ஓலா நிறுவனம் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.