Page Loader
AI புகைப்படம்: ராம்ப் வாக்கில் ஸ்டைலாக வலம் வரும் மார்க் ஜுக்கர்பெர்க்!
மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் AI புகைப்படம் இணையத்தில் வைரல்

AI புகைப்படம்: ராம்ப் வாக்கில் ஸ்டைலாக வலம் வரும் மார்க் ஜுக்கர்பெர்க்!

எழுதியவர் Siranjeevi
Apr 01, 2023
01:33 pm

செய்தி முன்னோட்டம்

மெட்டா நிறுவன தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க் ஸ்டைலாக ராம்ப் வாக் செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஸ்டைலாக கண்ணாடி போட்டுக்கொண்டு ரோபோ போல் செல்கிறார். ஆனால் பலரும் நன்றாக உள்ளது எனக்கூற, இந்த புகைப்படம் உண்மையானது இல்லை என தெரிய வந்துள்ளது. ஆம், MidJourney AI ஐப் பயன்படுத்தி இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ஆண்ட்ரூ கீன் காவ், ட்விட்டர் பயனாளர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இதுபோன்ற AI புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும் நிலையில் இந்த புகைப்படமும் வரவேற்பை பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ராம்ப் வாக்கில் மார்க் ஜுக்கர்பெர்க் AI புகைப்படங்கள் வைரல்