மனிதர்கள் தொலைபேசியால் கட்டப்பட்டிருக்கிறார்கள்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி நம்மை அடிமையாக்கினாலும், மறுபக்கம் டிஜிட்டல் உதவி எளிதாகவே மாறிவிட்டது. இதனிடையே, இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியான வனிஷ் ஷரன் என்பவர் ட்விட்டர் பயனர்களுக்கு ஒரு உண்மை சோதனையை வழங்கினார். அவர் வெளியிட்ட பதிவில் "தொலைபேசி கம்பியால் கட்டப்பட்டிருந்தபோது" என்ற செய்தியுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலரும் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அதில், தொழில்நுட்பம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் இப்போது நம் வழக்கமான வாழ்க்கையில் நம்மை பாதிக்கிறது என்பதை இது ஆச்சரியப்பட வைக்கிறது எனக்கூறியுள்ளார் ஒருவர். மற்றொருவரான இந்திய பேட்மிண்டன் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான ஜ்வாலா குட்டா இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.